மேலும் செய்திகள்
போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
27-Jun-2025
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் அருகே, கொன்னையார், 87.கவுண்டம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், நேற்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயராமன் பேசினார். எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் மணிகண்டன், உறுப்பினர்களின் பதவி குறித்து பேசினார். இதில், 100 நாள் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி இல்லாமல் தினமும் வழங்க வேண்டும். அரசு அறிவித்த சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும். விபத்து மற்றும் விஷக்கடியால் உயிரிழந்த குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் அரசு நிதி வழங்க வேண்டும். இந்தியா முழுவதும், நுாறு நாள் பணிக்காக, நான்கு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
27-Jun-2025