வரவேற்பு பேனர் கிழிப்பு அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி
நாமக்கல், அ.தி.மு.க., பொதுச்செயலாளர், இ.பி.எஸ்., நாமக்கல் மற்றும் ப.வேலுார் சட்டசபை தொகுதிகளில், மக்களை சந்தித்து நேற்று பிரசாரம் செய்தார். இதையொட்டி அக்கட்சியினர், அவரை வரவேற்கும் வகையில், ஆங்காங்கே, சாலையோரங்களில் பிளக்ஸ் பேனர்களை வைத்திருந்தனர். நாமக்கல் மாநகரிலும், கட்சியினர் ஆங்காங்கே பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். அதேபோல், அ.தி.மு.க., வர்த்தக அணி மாநில இணை செயலாளர் மோகன், தேசிய நெடுஞ்சாலை ஓரமாக, இ.பி.எஸ்., வரவேற்று, 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பிளக்ஸ் பேனர்களை வைத்திருந்தார்.இவற்றில், நாமக்கல்-சேலம் சாலை, பாச்சல் முதல், புதன்சந்தை வரையில், 30க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். குறிப்பாக அவரது புகைப்படம் மட்டும் கிழிக்கப்பட்டுள்ளது. இது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.