மேலும் செய்திகள்
மது விற்ற இருவர் கைது
15-Sep-2024
பேக்கரியில் மது விற்றவர் கைதுராசிபுரம், செப். 20-ராசிபுரம் அருகே, பேக்கரியில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், சந்து கடைகளில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்தில் ஈடுபட்டனர். நேற்று, பட்டணம் விநாயகர் கோவில் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில், சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது.உள்ளே ஆய்வு செய்தபோது கடைக்குள், 58 டாஸ்மாக் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மது விற்பனை செய்த, பட்டணம் வடக்கு தெருவை சேர்ந்த செல்வத்தை, 56, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 58 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
15-Sep-2024