ஆல் டிரைவர்ஸ் அசோசியேஷன் கலந்தாய்வு கூட்டம்
நாமக்கல், தமிழ்நாடு ஆல் டிரைவர்கள் சங்கம் என்பது, அனைத்து வாகன டிரைவர்களுக்கான சங்கம். டிரைவர்களை ஒன்றிணைத்து, போக்குவரத்து தொடர்பான விஷயங்களில், அவர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக இந்த சங்கம் செயல்படுகிறது.இந்த சங்கம் சார்பில், மாவட்ட கலந்தாய்வு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. சங்க மாநில பொது செயலாளர் தங்கபாண்டியன் தலைமை வகித்து, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, சங்கத்தின் வருங்கால செயல்திட்டங்கள், புதிய உறுப்பினர்களுக்கு கிடைக்கும் நலத்திட்டங்கள் குறித்து பேசினார். மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், செந்தில்குமார், சசிகுமார், லாரி, வேன், ஆட்டோ, கார் டிரைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.