உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முன்னாள் மாணவியர் சந்திப்பு

முன்னாள் மாணவியர் சந்திப்பு

ராசிபுரம்: ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 1975--76-ம் ஆண்டு பயின்ற மாணவியர், 45 பேர், 50 ஆண்டுக-ளுக்கு பின் சந்தித்த நிகழ்ச்சி நடந்தது. பொன்விழா ஆண்டை-யொட்டி பள்ளி வளாகத்திலேயே ஒன்று கூடி மாணவ பரு-வத்தை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.சந்திப்பு நிகழ்ச்சிக்கான விழாவில், முன்னாள் மாணவி திரிபுர சுந்-தரி வரவேற்று பேசினார். வசந்தி தலைமை வகித்தார். தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.மாணவியர், 45 பேரும் தங்கள் தற்போதையை பணி, குடும்ப சூழல் குறித்து பகிர்ந்து கொண்டனர்.பள்ளி காலங்களில் விளையாடி மகிழ்ந்த பழைய நாட்களை நினைவு கூர்ந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவினர். மேலும், தங்களது பள்ளி ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் பொன்விழா ஆண்டு நினைவு மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. அனைவரும் குழு புகைப்-படம் எடுத்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ