உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வக்ப் வாரிய சட்ட திருத்தம்: நா.த.க., ஆர்ப்பாட்டம்

வக்ப் வாரிய சட்ட திருத்தம்: நா.த.க., ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: மத்திய அரசு, வக்ப் வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நா.த.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி, நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் தலைமை வகித்தார். மண்டல செயலாளர்கள் ஆனந்த், ஹரிகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சுடலைராஜன், கொள்கை பரப்பு செயலாளர் பார்த்திபன் ஆகியோர் பங்கேற்று, 'வக்ப் வாரிய சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி' கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை