உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆண்டாள் திருக்கல்யாண முளைப்பாரி வழிபாடு

ஆண்டாள் திருக்கல்யாண முளைப்பாரி வழிபாடு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், ஆண்டாள் திருக்கல்யாணத்தையொட்டி பாவை நோன்பு எனப்படும் முளைப்பாரி வழிபாடு நடந்தது. மார்கழி முதல் நாள் தொடங்கி, ஆண்டாள் பெருமாளை சேர நோன்பு இருக்கிறார். இதற்கு பாவை நோன்பு எனப்படும் தை முதல் நாளில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்காக கல்யாண நாளுக்கு, 11 நாட்கள் முன் பெண்கள் முளைப்பாரியிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடி, சுவாமிகளை வணங்கி வருவர். ஆண்டாள் திருகல்யாணம் முடிந்த பின், முளைப்பாரியை காவிரி ஆற்றுக்கு எடுத்து சென்று, சிறப்பு வழிபாடு நடத்தி, காவிரியில் விட்டு வருவது வழக்கம். அது போல் முளைப்பாரியை மேளதாளங்கள் முழங்க, பெண்கள் ஊர்வலமாக காவிரி ஆற்றுக்கு கொண்டு சென்று, கும்மியடித்து, வழிபாடு நடத்தி, காவிரி நீரில் விட்டு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ