உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ஜெயக்கொடி தலைமை வகித்தார். அதில், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்கி, மாதம், 26,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக, 9,000 ரூபாய் அகவிலைப்படியுடன் சேர்த்து வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடையாக, 10 லட்சம் ரூபாயும், உதவியாளருக்கு, 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. இதில், ஐ.சி.டி.எஸ்., மாநில தலைவர் ரத்தினமாலா, மாவட்ட செயலாளர் பிரேமா, பொருளாளர் குர்ஷித் உள்ளிட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி