உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ஆவேச மனைவிக்கு காப்பு

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ஆவேச மனைவிக்கு காப்பு

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயைஊற்றிய ஆவேச மனைவிக்கு 'காப்பு'ராசிபுரம், டிச. 1--குடும்ப தகராறில் கணவன் மீது மிளகாய் பொடியை துாவி, கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ஆவேச மனைவியை போலீசார் கைது செய்தனர்.ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பன்பாளையத்தை சேர்ந்தவர் சேகர் மகன் அஜித்குமார், 27; கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராதா, 24; தனியார் பைனான்ஸில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு, 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த, 3 மாதங்களுக்கு முன் இருவரும் பிரிந்தனர். ராதா, அய்யம்பாளையத்தில் உள்ள தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், அய்யம்பாளையத்தில் உள்ள குழந்தைகளை பார்க்க அஜித்குமார் சென்றுள்ளார். அப்போதும், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டிற்குள் சென்ற ராதா, கதவை தாழிட்டுக்கொண்டார். வெளியே வாசலில் நின்று கொண்டிருந்த அஜித்குமார், மனைவியை அழைத்துக்கொண்டிருந்தார்.சிறிது நேரத்திற்கு பின், ஆவேசமாக வெளியே வந்த ராதா, கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை, அஜித்குமார் கண்களில் வீசி அடித்தார். கண் எரிச்சலால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துக்கொண்டிருந்த அஜித்குமார் மீது, ஆத்திரம் அடங்காத ராதா, கொதிக்க வைத்து எடுத்து வந்த சமையல் எண்ணெயை ஊற்றினார். இதனால் மரண வலியில் அஜித்குமார் அலறி துடித்தார்.சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அஜித்குமாரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார், ராதாவை கைது செய்தனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை