உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தங்க கவச அலங்காரத்தில் ஜொலித்த ஆஞ்சநேயர்

தங்க கவச அலங்காரத்தில் ஜொலித்த ஆஞ்சநேயர்

நாமக்கல், நாமக்கல் நகரில் வரலாற்று சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்படி, தீபாவளி பண்டிகையான நேற்று காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து தங்க கவச அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் புத்தாடை அணிந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை