உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல்லில் அண்ணாதுரை பிறந்த நாள் பேச்சு போட்டி

நாமக்கல்லில் அண்ணாதுரை பிறந்த நாள் பேச்சு போட்டி

நாமக்கல், நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் பேச்சு போட்டி, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தனித்தனியே நாமக்கல்லில் நடந்தது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்த போட்டியில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சு போட்டி காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரையிலும், கல்லுாரி மாணவ, மாணவியருக்கான போட்டி மதியம் 1:30 மணிக்குஏ மேல் நடைபெற்றது. அரசுப் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், தமிழ் வளர்ச்சித் துறையினர் நடுவர்களாக செயல்பட்டனர். மாணவியருக்கான போட்டியில், பொட்டணம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீநிகாவர்ஷினி முதலிடம், பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி மகாஸ்ரீ இரண்டாமிடம், சேந்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி தன்யஸ்ரீ மூன்றாமிடம் பிடித்தனர். இவர்களுக்கு முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாய் வீதம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் அமீர், குமாரபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி யாழினி ஆகியோருக்கு சிறப்பு பரிசு தொகையாக, 2,000 -ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதேபோல், கல்லுாரி மாணவ, மாணவியருக்கான போட்டியில் வெற்றி பெற்றோருக்கும், பரிசு தொகை வழங்கப்பட உள்ளதாக, தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை