உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அண்ணாதுரை பிறந்த நாள் விழா தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

அண்ணாதுரை பிறந்த நாள் விழா தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

நாமக்கல், நாமக்கல்லில் நடந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழாவில், 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியை, எம்.பி., ராஜேஸ்குமார் துவக்கி வைத்தார்.நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 117வது பிறந்த நாள் விழா, நாமக்கல்லில் கொண்டாடப்பட்டது. அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் ஆகியோர், நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலத்தினர்.தொடர்ந்து, 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தின் கீழ், ஓட்டுச்சாவடி வாரியாக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை, மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார். நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில், ஓட்டுச்சாவடி வாரியாக, பூத் ஏஜன்ட்கள், கட்சி நிர்வாகிகள், தமிழகத்தின் மண், -மொழி, -மானம் காக்க, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளில், தமிழகத்தை தலைகுனிய விட மாட்டோம் என, ஓரணியில் தமிழ்நாடு இயக்க உறுதிமொழியை ஏற்றனர்.மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மாநில நிர்வாகிகள் வக்கீல் இளங்கோவன், ராணி, நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ