பொருளாதார மேம்பாட்டு கழக கடன் திட்டத்தில் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சம் உயர்வு
நாமக்கல்: 'தமிழக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களில், திட்டம், 1ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம், மூன்று லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக சிறுபான்மை-யினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம், தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களான சிறு தொழில் கடன், கைவினை கலை-ஞர்களுக்கு கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்-தப்படுகின்றன. மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து வகை கடன்க-ளுக்கும், திட்டம், 1ன் கீழ் பயன்பெற ஆண்டு வருமானம், நகர்ப்-புறத்திற்கு, 1.20 லட்சம் ரூபாய்க்கு மிகாமலும், கிராமப்புறத்திற்கு, 98,000 ரூபாய்-க்கு மிகாமலும் இருக்க வேண்டும் என நடைமு-றையில் இருந்தது.இந்த வருமான உச்சவரம்பு, கிராமம் மற்றும் நகர்ப்புறம் ஆகிய இரண்டிலும், தற்போது, மூன்று லட்சம் ரூபாயாக, கடந்த, அக்., 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தகவல்களுக்கு கலெக்டர் அலுவலக, இரண்டாம் தளத்தில், அறை எண், 28ல், அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்-மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்-ளலாம். நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லா-மிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய அனைத்து சிறு-பான்மையின மக்களும், இந்த வருமான உச்ச வரம்பு உயர்வை பயன்படுத்தி விண்ணப்பித்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.