உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காலை உணவு திட்டத்தில் மேலும் 28,000 பேர் பயன்

காலை உணவு திட்டத்தில் மேலும் 28,000 பேர் பயன்

நாமக்கல்:தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும், காலை உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, சென்னை திருவான்மியூரில், நேற்று முதல்வர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில், இத்திட்ட தொடக்க விழா, ராசிபுரம் ஒன்றியம், சிங்களாந்தாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்டத்தில், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்காக ஊரக பகுதிகளில், 247 பள்ளிகள், டவுன் பஞ்., பகுதிகளில், 41 பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில், 51 பள்ளிகள் என, மொத்தம், 339 பள்ளிகளில், 28,568 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இத்திட்டம், நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. சிங்களாந்தபுரம் அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், திட்டத்தை தொடங்கி வைத்தார். இதேபோல், நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !