அப்புராயர் சத்திரம் மக்கள் அறநிலையத்துறையிடம் மனு
குமாரபாளையம்: குமாரபாளையம் நகர காவிரிக்கரை அப்புராயர் சத்திரம் பகுதியில், 184 குடும்பத்தினர், நான்கு தலைமுறையாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். தற்போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், 184 குடும்பத்தினர் இடத்தை காலி செய்யக்கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்நிலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதுரா செந்தில் ஆலோசனைப்படி, ஈரோடு மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனர் பரஞ்சோதியிடம், 184 குடும்பத்தினர் சார்பில், குமாரபாளையம் தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், தமிழ் மாநில கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச்சங்க மாநில செயலர் பிரபாகரன் தலைமையில், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வேண்டி கோரிக்கை மனு வழங்கப்பட்டது.