அரசு பள்ளியில் கலைத்திருவிழா
ராசிபுரம்,ஃராசிபுரம் ஒன்றியம் கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கலைத்திருவிழா நடத்தப்பட்டது. கலைத்திருவிழாவில் பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கதை கூறுதல், ஓவியம் வரைதல், திருக்குறள் ஒப்புவித்தல், மாறுவேட போட்டி, களிமண் பொம்மை செய்தல், கிராமிய நடனம் மற்றும் கோலப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. தலைமை ஆசிரியர் சாந்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பேபி, பட்டதாரி ஆசிரியர் ராஜேஸ்வரி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.