உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உயர்வுக்குப்படி நிகழ்ச்சி; மாணவர்களுக்கு அழைப்பு

உயர்வுக்குப்படி நிகழ்ச்சி; மாணவர்களுக்கு அழைப்பு

நாமக்கல்: நாமக்கல், திருச்செங்கோட்டில், தலா 2 நாட்கள், 'உயர்வுக்குப்படி' என்ற வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மாணவ, மாணவியர் பங்கேற்று பயன்பெற, கலெக்டர் உமா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், 'உயர்வுக்குப்படி' என்ற வழிகாட்டி நிகழ்ச்சி மூலம், நாமக்கல் மாவட்டத்தில், 2023-24ம் கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, உயர்கல்விக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், உயர்கல்வியில் சேராதவர்கள், பிளஸ் 2வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஆகியோருக்கு வழிகாட்டும் வகையில், சிறப்பு முகாம் நடக்கிறது. நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல், கொல்லிமலை, மோகனுார், எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் ஆகிய ஒன்றியங்களுக்கு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி கலையரங்கில், நாளை மற்றம் 20ம் தேதி என, இரண்டு நாட்கள் நடக்கிறது. திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், எலச்சிபாளையம், வெண்ணந்துார், மல்லசமுத்திரம், பரமத்தி, கபிலர்மலை ஆகிய ஒன்றியங்களுக்கு, திருச்செங்கோடு வேலுசாமி முதலியார் சின்னம்மாள் திருமண மண்டபத்தில், வரும், 13, 24 என, இரண்டு நாட்கள், நடக்கிறது.முகாமில், இன்ஜி., கலை அறிவியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., அரசு மற்றும் தனியார் கல்லுாரி முதல்வர்கள் தலைமையில், அரங்குகள் அமைக்கப்பட்டு நேரடி சேர்க்கையும் நடக்கிறது. மேலும், உயர்கல்விக்கு வங்கி கடன் பெற, வங்கிகள் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு, வங்கி கடன் பெற உதவி செய்யப்படும். அதேபோல், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்களுக்கு, வருவாய்த்துறை சார்பில், அரங்கு அமைக்கப்பட்டு தேவையான சான்றிதழ் பெற உதவி செய்யப்படும். முகாமில் கலந்து கொண்டு உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ