உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துாய்மை பணியாளர் 2,807 பேருக்கு உதவி

துாய்மை பணியாளர் 2,807 பேருக்கு உதவி

நாமக்கல்: அம்பேத்கார் நினைவு தினத்தையொட்டி, திருச்செங்கோட்டில், நேற்று, துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. எம்.எல்.ஏ., ஈஸ்வரன் தலைமை வகித்தார். நகர-மைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் முன்-னிலை வகித்தார். இதில், 2,807 துாய்மை பணியாளர்களுக்கு, 7.61 கோடி ரூபாயில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.தொடர்ந்து அவர் பேசுகையில், ''பொதுமக்களுக்கு, 24 மணி நேரமும் பணி செய்ய கூடியவர்கள் டாக்டர்கள், செவிலியர்கள், பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்,'' என்றார். தொடர்ந்து, துாய்மை பணியாளர்களோடு சமபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்-பாபு, துணைத் தலைவர் கார்த்திகேயன், டி.ஆர்.ஓ., சுமன், டி.எஸ்.ஓ., முத்துராமலிங்கம், ஆர்.டி.ஓ., உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ