உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உதவி பேராசிரியை மாயம்

உதவி பேராசிரியை மாயம்

குமாரபாளையம், குமாரபாளையத்தில் பணிபுரியும், கல்லுாரி உதவி பேராசிரியரியை ஒருவரின் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, நிறுத்தப்பட்ட நிலையில் அவர் மாயமானார்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணிபுரிபவர் சுபத்ரா, 23. இவரது தந்தை ராஜவேல், 48, பழனி நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிகிறார். சுபத்ராவுக்கும், பிரபாகரன் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, சில காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் சுபத்ரா முனைவர் பட்டம் படிக்க, சான்றிதழ் சரி பார்க்க கடந்த, 8ல், இரவு 7:00 மணிக்கு சென்னை அண்ணா பல்கலை கழகம் சென்றார். 10ம் தேதி மகளை தொடர்பு கொண்டு ராஜவேல் கேட்ட போது, 'தான் சென்னையில் இருந்து, குமாரபாளையம் கல்லுாரிக்கு திரும்ப வந்து விட்டேன் என்று' கூறியுள்ளார். இவரது பேச்சில் நெருடல் இருந்ததால், சென்னையில் உள்ள சுபத்ரா தோழி விமலாவிடம் கேட்ட போது, சென்னை அண்ணா பல்கலை கழக கேன்டீன் வாசலில் சுபத்ரா மற்றும் பிரபாகரன் இடையே வாக்குவாதம் நடந்தது தெரியவந்துள்ளது.இதையடுத்து, குமாரபாளையம் கல்லுாரியில் சுபத்ராவுடன் பணிபுரியும் காயத்ரி என்பவரிடம், ராஜவேல் கேட்ட போது, அவர் இங்கு வரவில்லை என்று கூறினார். இது குறித்து ராஜவேல், குமாரபாளையம் போலீசில், தன் மகள் சுபத்ராவை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி