உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

மல்லசமுத்திரம், சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் காளிப்பட்டி கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. ஆனி அமாவாசையான நேற்று காலை, 6:00 மணி முதல் மாலை வரை, மூலவர் கந்தசாமிக்கு பல்வேறு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. கோவில் முழுவதும் வண்ண மலர்களாலும், கனிகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.கோவில் உட்பிரகாரத்தில் உற்சவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஈரோடு, கரூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை