வி.ஏ.ஓ., மீது தாக்குதல்: வி.சி.க., ஆர்ப்பாட்டம்
நாமக்கல், எலச்சிப்பாளையம், வையப்பமலை அடுத்த மொஞ்சனுாரை சேர்ந்தவர் சிவகாமி, 35; இவர், மல்லசமுத்திரம், பாலமேடு வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வருகிறார். இவர் பணியாற்றும் பாலமேட்டில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளியதை, கடந்த, 18ல் தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன், வி.ஏ.ஓ., சிவகாமியை தாக்கியுள்ளார். அங்கிருந்த பொதுமக்கள், அவரை பிடித்து எலச்சிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே பெண் வி.ஏ.ஓ., சிவகாமியை தாக்கிய சீனிவாசனை, குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி, வி.ஏ.ஓ.,க்கள் கடந்த, 20ல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்ட மைய வி.சி.க., சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நீலவானத்து நிலவன் தலைமை வகித்தார். மாநகர துணை அமைப்பாளர் பிரபுவளவன் வரவேற்றார். தொடர்ந்து, 'வி.ஏ.ஓ., சிவகாமியை தாக்கியவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்; வி.ஏ.ஓ.,க்களுக்கு உரிய பாதுகாப்பும் சிறப்பு அதிகாரமும் வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர்.