உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பள்ளி வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் பலி

பள்ளி வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் பலி

குமாரபாளையம்:குமாரபாளையம் கே.ஓ.என்., தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், 38; இவரும், இவரது நண்பர் பழனிச்சாமி, 39, ஆகிய இருவரும், கே.ஓ.என்., தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே, 'ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ்' டூவீலரில் சென்றனர். பழனிசாமி டூவீலரை ஓட்டினார். அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியதில், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது தங்கராஜ் தலை மீது பள்ளி வாகனம் ஏறி, இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி தங்கராஜ் உயிரிழந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ