உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திடக்கழிவு மேலாண் விதிகள் முறையாக செயல்படுத்துவது குறித்து விழிப்புணர்வு

திடக்கழிவு மேலாண் விதிகள் முறையாக செயல்படுத்துவது குறித்து விழிப்புணர்வு

நாமக்கல்:நாடு முழுவதும், ஏப்., 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண் விதிகள் தொடர்பாக, நாமக்கல் மாநகராட்சி பகுதியில், விதிகளை முறையாக செயல்படுத்துவது குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜி தலைமை வகித்தார். வணிக நிறுவனங்களின் நிர்வாகிகள், குடியிருப்போர் நல சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதில், மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜி பேசியதாவது: இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையில், திடக்கழிவு மேலாண் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, நாமக்கல் மாநகராட்சியில் புதிய விதிகளை நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. அதன்படி, திடக்கழிவுகளை முறையாக கையாளப்படுகிறது. கழிவுகளை வகைப்படுத்தி சேகரிக்கப்படுகிறது. இப்பணிகளுக்கு, மாநகராட்சி நிர்வாகத்திற்கு வணிக நிறுவனங்கள், குடியிருப்போர் இணைந்து ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, மாநகர் நல அலுவலர் கஸ்துாரிபாய், முன்னாள் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பாஸ்கரன், சுப்ரமணியன், ஜான்ராஜா, நந்தினி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை