உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு மகளிர் கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு

அரசு மகளிர் கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், யூத் ரெட்கிராஸ், பொருளியல் துறை சார்பில், காலநிலை மாற்றம் மற்றும் ஓசோன் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார். இயற்கை ஆர்வலர் கிஷோர், கால நிலை மாற்றம் மற்றும் ஓசோன் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினார். துறைத்தலைவர்கள், பேராசிரி யர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை யூத் ரெட்கிராஸ் திட்ட அலுவலர் புவனேஸ்வரி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ