உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மஞ்சள் நிறத்தில் வந்த குடிநீரால் பகீர்

மஞ்சள் நிறத்தில் வந்த குடிநீரால் பகீர்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, நேரு நகர் பகுதியில், நேற்று இரவு, 7:30 மணிக்கு நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு குடிநீர் வழங்-கப்பட்டது. அப்போது குடிநீர் மஞ்சள் நிறத்தில் வந்தது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சாய ஆலைகள் விதிமுறை மீறி, சாயக்கழிவுநீரை வடிகால் வழியாக வெளியேற்றி வருகின்-றனர். இவ்வாறு வடிகால் வழியாக செல்லும் சாயக்கழிவுநீர், குடிநீர் குழாயில் புகுந்து தண்ணீரில் கலந்ததால் தான், குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது என, அப்பகுதி மக்கள் தெரிவித்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை