உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாழைத்தார் விலை உயர்வு

வாழைத்தார் விலை உயர்வு

ப.வேலுார், ஜன. 3--ப.வேலுார் தாலுகா பாண்டமங்கலம், பொத்தனுார், நன்செய் இடையாறு, குப்பிச்சிபாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர்.உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் வாழைத்தார்கள் கொண்டு வந்து விற்கப்படுகிறது. ஏலம் எடுக்கப்படும் வாழைத்தார்கள், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார்களின் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று நடந்த ஏலத்திற்கு, 400 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம், 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பூவன் வாழைத்தார் நேற்று, 350 ரூபாய், 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரஸ்தாளி வாழைத்தார், 400 ரூபாயாகவும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கற்பூரவள்ளி வாழைத்தார், 350 ரூபாய், 4 ரூபாய்க்கு விற்பனையான மொந்தன் காய், 7 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்து குறைவால், வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை