மேலும் செய்திகள்
கிரிக்கெட் போட்டி
04-Jul-2025
நாமக்கல், பாரதியார், குடியரசு தின விளையாட்டு போட்டிகளில், கபடி, கைப்பந்து, பூ பந்து, கூடைப்பந்து போட்டிகளில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.நடப்பு, 2025--26ம் கல்வி ஆண்டிற்கான பாரதியார், குடியரசு தின விளையாட்டு போட்டிகளில், 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான, 12 வகையான பல்வேறு விளையாட்டு போட்டிகள், நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்தன. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, பூ பந்து மற்றும் கபடி போட்டிகள் நடந்தன. இதில், கபடி போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், செவ்வந்திப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பிடித்தன.கைப்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், ஜெய் விகாஸ் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பிடித்தது. அதேபோல், பூப்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பிடித்தன.கூடைப்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பிடித்தது. கால்பந்து போட்டியில், கீரம்பூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதலிடம், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பிடித்தது.
04-Jul-2025