உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.5,000 ஓய்வூதியம் வழங்கக்கோரி பாரதிய மஸ்துார் சங்கம் ஆர்ப்பாட்டம்

ரூ.5,000 ஓய்வூதியம் வழங்கக்கோரி பாரதிய மஸ்துார் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், 5,000 ரூபாய் உயர்த்தி வழங்கக்கோரி, நாமக்கல்லில் பாரதிய மஸ்துார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ரத்தி னம் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பி.எப்., நிர்வாகத்தால் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை மாதத்திற்கு, 1,000 ரூபாய் என்பதை, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷம் எழுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி