உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருவிழா நடத்துவது குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை

திருவிழா நடத்துவது குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை

மல்லசமுத்திரம், ஜூலை 9மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில், ஆனி மூல தேர்த்திருவிழா நடத்துவது குறித்து, இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்தது.மல்லசமுத்திரத்தில், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட சோழீஸ்வரர், அழகுராய பெருமாள், செல்லாண்டிஅம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஆனி மூல நட்சத்திரத்தன்று, தேர்த்திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். இரு பிரிவிடையே பல ஆண்டுகளாக நிர்வாகம் சம்பந்தமாக, கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்த்திருவிழா நடக்கும்.இந்தாண்டு கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில், பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆனி மூல நட்சத்திரமான இன்று (9) விழா நடத்துவது குறித்து, நேற்று மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில், இரு தரப்பினர் இடையே சட்டம், ஒழுங்கு பாதிக்கக் கூடாது என்பதற்காக, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இதில் பெரியமாரியம்மன், அழகுராய பெருமாள், செல்லாண்டி அம்மன், சின்னமாரியம்மன், சோழீஸ்வரர் கோவில்களில் அனைத்து சமுதாய ஊர் மக்களும் சிறப்பு தரிசனம், சிறப்பு பூஜை செய்து வழிபடலாம். கோவில் வெளிப்பிரகாரத்தில் அன்னதானம் வழங்கலாம் என, அதிகாரிகள் அறிவுறுத்தினர்.திருச்செங்கோடு டி.எஸ்.பி., கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ராதா, எஸ்.ஐ., ரஞ்சித்குமார், செயல் அலுவலர் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.புகையிலை பொருட்களை பிடிப்பதில் அதிகாரிகள் ஆர்வம்தரமில்லா உணவு பொருட்களை கண்டறிவதில் அலட்சியம்பள்ளிப்பாளையம், ஜூலை 9பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், குட்கா பொருட்களை பறிமுதல் செய்யும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தரமில்லாத உணவு பொருட்களை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், வெப்படை சுற்று வட்டார பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள், நுாற்பாலை தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். மேலும் எண்ணற்ற சிறிய ஓட்டல்கள் செயல்படுகின்றன. பெரும்பாலான ஓட்டல்களில் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீர், காய்கறி, எண்ணெய், மசாலா பொருட்கள் உள்ளிட்டவை தரமானதாக இல்லை. அத்துடன் சுவை மற்றும் நிறத்தை கூட்ட, அஜினமோட்டோ மற்றும் செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்துகின்றனர்.கலப்படம் கலந்த, தரமில்லாமல் உணவு பொருட்களை சாப்பிடுவதால், வயிறு சார்ந்த பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. புகையிலை பொருட்களை பிடிப்பதில் மட்டுமே, பள்ளிப்பாளையம் வட்டார உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர்.ஓட்டல், பேக்கரி கடைகளில் ஆய்வு செய்து தரமில்லாத உணவு பொருட்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.இது குறித்து, பள்ளிப்பாளையம் வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரங்கநாதன் கூறுகையில்,'' ஓட்டல், உணவு பொருட்கள் கடையில் தொடர்ந்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ