உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 310 ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானம் அமைப்பதில் முறைகேடு: பா.ஜ., குற்றச்சாட்டு

310 ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானம் அமைப்பதில் முறைகேடு: பா.ஜ., குற்றச்சாட்டு

ராசிபுரம், :நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 310 ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானம் அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளது என, பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. நாமகிரிப்பேட்டை யூனியன், ஊனாந்தாங்கல் கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதில், 1.45 லட்சம் ரூபாய் நிதி முறைகேடு நடந்திருப்பதாக அப்பகுதி இளைஞர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள விளையாட்டு மைதானத்தை, கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும் என, பா.ஜ., மத்திய அரசின் நலத்திட்ட பிரிவின் மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் உள்ள, 310 பஞ்.,களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அந்தந்த கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கபடி, வாலிபால் போட்டிகளுக்கு நிதி ஒதுக்கி உள்ளனர். கிரிக்கெட் மைதானத்திற்கு அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாயும் மற்ற மைதானங்களுக்கு, 10,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் வரை ஒதுக்கியுள்ளனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிகபட்சமாக, 1.45 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.ஆனால், பெரும்பாலான பஞ்.,களில் விளையாட்டு மைதானங்களை கூட சீரமைக்காமல் பணத்தை முறைகேடாக எடுத்துவிட்டனர். விளையாட்டு உபகரணங்களையும் வாங்கவில்லை. எனவே கலெக்டர் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒவ்வொரு ஊராட்சியையும் ஆய்வு செய்து மைதானத்திற்கு ஒதுக்கிய பணத்தை முறையாக செலவழித்துள்ளார்களா என்பதை அங்கு விளையாடும் இளைஞர்களிடம் கேட்டு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை