மேலும் செய்திகள்
பா.ம.க., தலைவர் அன்புமணி பிறந்த நாள் விழா
10-Oct-2025
நாமகிரிப்பேட்டை, நாமக்கல் மாவட்டத்தில், கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்தது. இதில், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், தொப்பப்பட்டி ஊராட்சியை சேர்ந்த ரேவதி, 45, என்பவரின் கூரைவீடு சேதமடைந்தது. இதையடுத்து, நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் சரவணன், மாநில மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் துணை அமைப்பாளர் லோகேந்திரன் உள்ளிட்டோர் நேரடியாக சென்று ஆறுதல் கூறினர். மேலும், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் மனு அளிக்கும்படி ஆலோசனை தெரிவித்தனர். மேலும், அதே பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகி கணேசனுக்கு, வீட்டுமனை பட்டா கிடைக்க, பா.ஜ., நிர்வாகிகள் உதவி செய்தனர். மாவட்ட பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் அருள், கிளை தலைவர்கள் குணசேகரன், அங்கமுத்துகணேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.
10-Oct-2025