உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

எருமப்பட்டி: சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில், பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. எருமப்-பட்டி கிழக்கு ஒன்றியத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், புதிய உறுப்பினர்களை நிர்வாகிகளாக தேர்வு செய்வது, உறுப்பினர்கள் விபரங்களை திரட்டுவது, 2026 தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்தினர். மாநில பா.ஜ., மத்திய நலத்திட்ட பிரிவின் மாநில துணைத்தலைவர் லோகேந்-திரன், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை