சூரியம்பாளையத்தில் கருப்பு கொடி போராட்டம்
திருச்செங்கோடு, திருச்செங்கோடு அடுத்த சூரியம்பாளையத்தில் கழிவுநீர் கால்வாய் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.திருச்செங்கோடு நகராட்சி, 1, 7, 8, 10 ஆகிய வார்டுகளில் இருந்து வெளியேறும் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல புதிய கால்வாய் அமைக்கும் பணி நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டது. அப்போது சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று சூரியம்பாளையத்தில் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கழிவுநீர் கால்வாய் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, கடந்த வாரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம், சாலை மறியல் போராட்டம் நடத்தினோம். அப்போது திட்டம் கைவிடப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், இப்போது வரை பணிகளை செய்து வருகிறது. இதை கண்டிக்கும் வகையில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.