மேலும் செய்திகள்
ரத்த தான முகாம்
05-Oct-2025
அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்
1 hour(s) ago
நாமக்கல், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், யூத் ரெட் கிராஸ் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர்(பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் அன்புமலர் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாணவர்களுக்கு ரத்த தானம் செய்வதற்கான தகுதிகள், அவசியம் மற்றும் ஆண்டுக்கு எத்தனை முறை ரத்த தானம் செய்யலாம் என்பது குறித்தும், ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினார். மேலும், ரத்ததானம் மூலம் உடலுக்கு ஏற்படும் பலன்கள் பற்றிய விழிப்புணர்வையும் மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டனர். முகாமில், பல்வேறு துறை சார்ந்த, 43 மாணவர்கள் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்தனர். ஏற்பாடுகளை, யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன், மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.
05-Oct-2025
1 hour(s) ago