உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சடலமாக மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சடலமாக மீட்பு

கிணற்றில் தவறி விழுந்தகுழந்தை சடலமாக மீட்புப.வேலுார், டிச. 8--ப.வேலுார் அருகே, கொளக்காட்டு புதுாரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 32; ராணுவத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி யசோதா, 28; தனியார் வங்கியில் பணிபுரிகிறார். இவர்களது குழந்தை அகில்கிருஷ்ணன், 2. நேற்று முன்தினம் காலை, வழக்கம்போல் பணிக்கு சென்ற யசோதா, குழந்தையை, தன் தாய் தங்கம்மாள், 60, என்பவரிடம் விட்டு சென்றார். மாலையில், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அகில்கிருஷ்ணன், திடீரென காணவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் தேடிப்பார்த்தபோது, வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குழந்தை அகில்கிருஷ்ணன் சடலமாக மீட்கப்பட்டான். இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ