மழையில் வீணாகும் புத்தகம் மா.கம்யூ., இன்று ஆர்ப்பாட்டம்
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்.,ல், 16,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கிளை நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 20,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. கிளை நுாலக கட்டடம் மிகவும் பழமையானது என்பதால் மேற்கூரை தளம் சேதமடைந்துள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் புத்தகங்கள் மீது விழுகிறது. நல்ல நல்ல புத்தகங்கள் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை வாசகர்கள் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நுாலகத்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து, இன்று கிளை நுாலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.