உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரத்தில் பாலங்கள் பராமரிப்பு பணி

ராசிபுரத்தில் பாலங்கள் பராமரிப்பு பணி

ராசிபுரம், ராசிபுரத்தில், சாலையில் உள்ள பாலங்களை பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. தமிழக நெடுஞ்சாலை துறையில், ஆகஸ்ட் மாதம் பாலங்கள் பராமரிப்பு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. பருவமழை பெய்து வருவதால், ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில், சாலைகளில் உள்ள பாலங்களில் நீரோட்ட பாதைகள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மசக்காளிப்பட்டி முதல் ஆட்டையாம்பட்டி வரையிலான, மாவட்ட முக்கிய சாலையில் உள்ள சிறுபாலங்களின் நீரோட்ட பாதைகளை துார்வாரும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் பாலங்களை பராமரித்து பெயின்ட் அடிக்கும் பணியும் நடக்கிறது. இதை நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திருகுணா ஆய்வு செய்தார்.ஆய்வின் போது ராசிபுரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ்குமார் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ