உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எக்ஸல் கல்லுாரியில் வர்த்தக திருவிழா

எக்ஸல் கல்லுாரியில் வர்த்தக திருவிழா

குமாரபாளையம், குமாரபாளையம் எக்ஸல் கல்லுாரியில், இரண்டு நாள் வர்த்தக திருவிழா நேற்று துவங்கியது. இன்றும் நடக்கிறது. எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன், துணைத்தலைவர் மதன்கார்த்திக், எக்ஸல் பப்ளிக் பள்ளி இயக்குனர் கவியரசி மதன் கார்த்திக் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொழில்நுட்ப வளாக செயல் இயக்குனர் பொம்மண்ணராஜா, எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் செங்கோட்டையன், எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் விமல் நிஷாந், இயக்குனர் நிர்வாகம் அன்பு கருப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக எக்ஸல் பப்ளிக் பள்ளி இயக்குனர் கவியரசி மதன் கார்த்திக் வரவேற்றார்.டேபுளர் கவுசிக் சேர்மன் ஏரியா, 7 ரவுண்ட் டேபிள் இந்தியா, ரொட்டோரியன் அன்னை ஏ ரவிசங்கர் அசிஸ்டன்ட் கவர்னர் ஜோன்-1, ரொட்டோரியன் மகேஷ் குமார், பிரசிடென்ட் ரோட்டரி கிளப் ஆப் குமராபாளையம், சர்க்குலர் மந்தாகினி, சேர் பர்சன் லேடீஸ் சர்க்கிள் இந்தியா, சர்குலர் வைஷ்ணவி, செகரட்டரி ஏரியா, 7லேடிஸ் சர்க்கிள் இந்தியா ஆகியோர் பங்கேற்றனர். 110-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், ள்ளிகளுக்கு இடையே கபடி, கைப்பந்து, சதுரங்கம் எறிபந்து டேபிள் டென்னிஸ், கோ-கோ போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 64க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை