விவசாயிக்கு தனிக்குறியீடு எண் வழங்கும் முகாம் வேளாண் இணை இயக்குனர் அழைப்பு
நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில், விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்குவதற்கான தரவுகள் பதிவு செய்யும் முகாம் தொடங்கி உள்ளது. அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெ-றலாம்' என, வேளாண் இணை இயக்குனர் கலைச்செல்வி தெரி-வித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், வேளாண் அடுக்ககம் திட்டத்தில், அனைத்து கிராமங்களிலும் உள்ள அனைத்து பஞ்சாயத்து அலுவ-லகம், சமுதாய கூடங்களில், ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், நில விபரங்களுடன், விவசாயிகளின் விபரம், நில உடமை வாரியான விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிக்கும் தனிக்குறியீடு எண் வழங்கப்படுகிறது.விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின், அவர்களின் தர-வுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும்.இதன் மூலம், மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்ட பலன்களும், விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும்.இதனால், அனைத்து துறை பயன்களையும், மானியங்களையும் ஒற்றைச்சாளர முறையில் பெறுவதுடன், வலைதளத்தில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில், அரசின் பயன்களை பெற்றுக்கொள்ளலாம்.ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடி பணப்பரிமாற்றம் செய்யப்படும். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளும், முகாம்கள் நடக்கும் நாளில், நில ஆவணங்கள், ஆதார் எண், மொபைல் எண் கொடுத்து பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.