கார் கவிழ்ந்து விபத்து
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தை சேர்ந்த மணி மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும், காடச்சநல்லுார் அடுத்த மண் கரடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், நேற்று மதியம் மது அருந்தினர். பின் போதை தலைக்கேறிய நிலையில், காரை வேகமாக ஓட்டிச் சென்றனர். ஸ்ரீகார்டன் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர கால்வாயில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், காரில் இருந்த இருவரையும் மீட்டு, பள்ளிப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.