உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

மல்லசமுத்திரம்:நல்லாம்பாளையத்தில் கார்மென்ட்ஸ்க்கு லோடு ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையத்தில் இருந்து, ஈரோட்டிற்கு நேற்று மதியம் 2:00 மணியளவில் கார்மென்ட்ஸ் பீஸ்களை ஏற்-றிக்கொண்டு, அசோக் லைலேண்ட் சரக்கு வாகனம் சென்றது. எலச்சிபாளையம் அருகே, நல்லாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. வாகனத்தின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கி-யது. மல்லசமுத்திரத்தை சேர்ந்த சதீஷ், 25, என்பவர் ஓட்டி வந்தார். அவருக்கு காயம் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ