சென்னகேசவ பெருமாள் சங்ககிரியில் திருவீதி உலா
சங்ககிரி:சங்ககிரியில் உள்ள, சென்னகேசவ பெருமாள் கோவில் சித்திரை தேர்திருவிழாவின், நான்காம் நாளான நேற்று கருடர் வாகனத்தில் சங்ககிரி நகர் முழுவதும் நேற்று இரவு வலம் வந்தார். இக்கோவிலில் சித்திரை தேர்திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான தேர் திருவிழா கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நான்காம் நாளான நேற்று இரவு, கருடர் வாகனத்தில் சென்னகேசவ பெருமாள் சங்ககிரி நகரை வலம் வந்தார்.