துாய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி
நாமக்கல் ஊ:மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழக அரசு உத்தரவுப்படி, நேற்று நாமக்கல் மாநகராட்சி பகுதியில் துாய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி நடந்தது. நாமக்கல்-மோகனுார் சாலை, தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணியை, மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தலைமையாசிரியர் சீனிவாசராகவன் முன்னிலை வகித்தார். நகர பகுதிகளில் சுற்றிவந்த இந்த விழிப்புணர்வு பேரணியில், மாணவர்கள் பலர் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, துாய்மை சேவை நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதன்படி, நாமக்கல்லில் நேற்று மாநகராட்சி துப்புரவு அலுவலகம் மூலம் நடந்தது. மாநகர நல அலுவலர் கஸ்துாரிபாய், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், ஜான்ராஜா, சுப்பிரமணி, பாஸ்கரன், சர்வம் அறக்கட்டை நிர்வாகி ரம்யா மற்றும் உதவி தலைமையாசிரியர் ராமு, பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.