கேட்கும் மருந்துகளை உடனடியாக வழங்க ஏதுவாக இருப்பு வைத்துக்கொள்ள கலெக்டர் அறிவுரை
நாமக்கல்: 'மருத்துவமனைகளில் கேட்கும் மருந்துகளை உடனடியாக வழங்கும் வகையில், அனைத்து வகையான மருந்துகளையும் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்' என, கலெக்டர் உமா அறி-வுறுத்தினார். நாமக்கல் மாநகராட்சி வாரச்சந்தை வளாகத்தில், 4 கோடி ரூபாய் மதிப்பில், பல அடுக்கு வணிக வளாகம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ஆய்வு செய்தார். தொடர்ந்து, சேந்தமங்கலம் தாலுகா, அலங்காநத்தம் கிராமத்தில், தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இயங்கி வரும், மாவட்ட மருந்து கிடங்கையும் ஆய்வு செய்தார்.அப்போது, 'மருந்து கிடக்கில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்-கான மருந்துகளை முறையாக பிரித்து வைக்க வேண்டும். மருந்து-களின் இருப்புகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் சரி பார்ப்-பதுடன், மருத்துவமனைகளில் கேட்கப்படும் மருந்துகளை உடன-டியாக வழங்கும் வகையில், அனைத்து வகையான மருந்துக-ளையும் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்-தினார்.ராசிபுரம் நகராட்சி, அணைப்பாளையத்தில், நகர்ப்புற மேம்-பாட்டு திட்டத்தில், 10.58 கோடி ரூபாய் மதிப்பில், ராசிபுரம் நகர புதிய ஸ்டாண்ட் அமையவுள்ள இடத்தில் ஆய்வு செய்த கலெக்டர், ராசிபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிகள், ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் பஸ் நிறுத்தம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும், ஆய்வு செய்தார். மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.