விதிமீறும் மைக்ரோ பைனான்ஸ் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தில், நேற்று மா.கம்யூ., கட்சி சார்பில் சிறப்பு மாநாடு நடந்தது. ஒன்றிய செயலாளர் ரவி தலைமை வகித்தார். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.தொடர்ந்து அவர் பேசியதாவது:சுயஉதவி குழுக்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்குகின்றனர். பெண்கள் பொருளதாரத்தை மேம்படுத்தும் வகையில், சுயஉதவி குழுக்கள் பயன்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இன்று படிப்படியாக அது கடன் வாங்கி வசூ-லிக்கின்ற நிறுவனமாக மாறி விட்டது.மைக்ரோ பைனான்சில் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை என்றால், கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். அரசு உடமை வங்கியில் இருந்து கடன் வாங்கி, மைக்ரோ பைனான்ஸ் நம்மிடம் கடன் கொடுக்கின்றனர்.கடன் வாங்கும் உறுப்பினர்களை அச்சுறுத்துவது கூடாது என, விதிமுறை உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பலர் கடனை கட்ட முடியாமல் தற்கொலைக்கு முயல்கின்றனர். அரசு அறிவித்துள்ள விதிமுறை மீறி செயல்படும் மைக்ரோ பைனானஸ் மீது மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன், மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், அசோகன், ரங்கசாமி உள்பட, 500க்கும் மேற்-பட்டோர் கலந்து கொண்டனர்.