உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நவீன தானியங்கி பால்பதன ஆலை கட்டுமான பணி: கலெக்டர் ஆய்வு

நவீன தானியங்கி பால்பதன ஆலை கட்டுமான பணி: கலெக்டர் ஆய்வு

நாமக்கல், நாமக்கல்-மோகனுார் சாலை லத்துவாடியில், 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன தானியங்கி பால்பதன ஆலை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. கலெக்டர் துர்காமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி அனைத்து வசதிகளுடன், 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தானியங்கி நவீன பால்பதன ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன.இயந்திரங்கள், 90 சதவீதம் கொள்முதல் செய்யப்பட்டு, 40 சதவீதம் நிறுவப்பட்டுள்ளன. பால்பதன ஆலை அமைக்கும் பணி முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, அதற்கான சோதனை ஓட்டம் நவ.,ல் மேற்கொள்ளப்பட இருக்கிறது.டிச., மாதம் அனைத்து பணிகளும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஜன.,ல் அதிநவீன பால்பதன ஆலை, மக்கள் பயன்பாட்டுக்கு வரும். அப்போது, மாவட்டத்தில் உள்ள, 15,000 பால் உற்பத்தியாளர்கள், நான்கு லட்சம் நுகர்வோர் பயனடைவர். பால் மற்றும் உப பொருள்கள் தடையின்றி கிடைப்பது மட்டுமின்றி, 1,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பொதுமேலாளர்(ஆவின்) சண்முகம், துணைப்பதிவாளர்(பால்வளம்) சண்முகநதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ