மேலும் செய்திகள்
கூட்டுறவு பணியாளர் குறைகேட்பு கூட்டம்
11-Jul-2025
நாமக்கல், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்யும் வகையில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மண்டல அளவில், 'பணியாளர் நாள்' நிகழ்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் அறிவுரைப்படி, இரு மாதங்களுக்கு ஒருமுறை, இரண்டாவது வெள்ளிக்கிழமை, மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறை தீர்க்கும், 'பணியாளர் நாள்' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர் குறை தீர்க்கும், 'பணியாளர் நாள்' நிகழ்ச்சி, மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், கூட்டுறவு நிறுவன பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள், தங்கள் தொடர்பான விண்ணப்பங்களை வழங்கினர். துணைப்பதிவாளர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
11-Jul-2025