உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.20 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ரூ.20 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம், மல்லசமுத்திரத்தில் ரூ.20 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடந்தது.திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடந்தது. மங்களம், காளிப்பட்டி, பள்ளக்குழி அக்ரஹாரம், செண்பகமாதேவி, ராமாபுரம், பருத்திப்பள்ளி, சோமணம்பட்டி, மாரம்பாளையம், கருங்கல்பட்டி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடைகொண்ட, 782 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் சுரபி ரகம் குவிண்டாலுக்கு, ரூ.8,111முதல் ரூ.10,486 வரையிலும், பி.டி., ரகம் ரூ.6,359 முதல், 7,999 வரையிலும், கொட்டு பருத்தி ரூ.4,409 முதல் 6,425 வரையிலும் என மொத்தம் ரூ. 20 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் செப்., 3ம் தேதி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி