உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பருத்தி விவசாயிகள் தக்கை பூண்டு விதைக்க அறிவுரை

பருத்தி விவசாயிகள் தக்கை பூண்டு விதைக்க அறிவுரை

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, வேளாண் உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் வயலிலேயே மடக்கி உழுவதற்கு சணப்பு அல்லது தக்கைப்பூண்டு விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வது அனைத்து பருத்தி ரகங்களுக்கும் ஏற்றது. பருத்தி சாகுபடியின் போது, இருவரிசையில் பருத்தி விதைத்தபின் ஒரு வரிசை சணப்பை அல்லது தக்கைப்பூண்டினை விதைக்கலாம். 50 சதவீதம் பசுந்தாள் பயிர்கள் பூக்க ஆரம்பித்தவுடன் மடக்கி உழவு செய்யவேண்டும். இதனால் மண் வளம் மேம்படுவதோடு களைக்கட்டுப்பாடும் சாத்தியமாகிறது. இதனால், 16 சதவீதம் மகசூல் (விதையுடன் கூடிய பஞ்சு) மற்றும், 33 சதவீதம் களைக்கட்டுப்பாடும் செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ