உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.1.50 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்

ரூ.1.50 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், டி.சி.எம்.எஸ்.,சில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. இங்கு, சூரியகவுண்டம்பாளையம், பள்-ளிப்பட்டி, கொளங்கொண்டை, ராமாபுரம், பீமரப்பட்டி, செண்பக-மாதேவி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்களது தோட்டத்தில் விளைந்த பருத்தியை ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.நேற்று நடந்த ஏலத்தில், 3900 கிலோ பருத்தியை, விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில், பி.டி., ரகம் குவிண்டால், 6,890 ரூபாய் முதல், 7,560 ரூபாய், கொட்டு பருத்தி, 3,850 ரூபாய் முதல், 4,825 ரூபாய் என, மொத்தம், 1.50 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 11ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !